dangal movie actress Suhani Bhatnagar passed away

அமீர்கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் சுஹானி பட்னாகர். இப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்தின் மூலம் பலரின்கவனத்தையும்ஈர்த்திருந்தார். இந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளதாக அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் பக்கம் வாயிலாகத்தெரிவித்துள்ளது. மேலும் அவர்களது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளது.

Advertisment

இவருக்குசமீபத்தில் விபத்து ஏற்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக எடுத்துக் கொண்ட மாத்திரைகள், பக்க விளைவுகளைக் கொண்டு வந்ததாகவும், அதன் எதிர்வினையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி காலமானதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

19 வயதே ஆனசுஹானி பட்னாகர், திடீரென மறைந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாத்தில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இவரது மறைவிற்கு தற்போது திரைப் பிரபலங்கள் பலரும்இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.