இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் ரௌத்திரம். இந்த படத்தில் கௌரி என்ற கதாபாத்திரத்தில் சென்றாயன் வில்லனாக நடித்திருப்பார். அதேபோல கணேஷ் ஆச்சார்யாவும் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்திருப்பார்.

Advertisment

prabhu deva with ganesh acharya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கணேஷ் ஆச்சார்யா பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர். நடிகர் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பரும் ஆவார். பிரபு தேவாவுடன் ஏபிசிடி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கணேஷ்.

இந்நிலையில் கணேஷ் ஆச்சார்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்துவதாக அவருடைய நடனக்குழுவில் பணிபுரிந்த நடனமாடும் பெண் மும்பை அம்போலி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.

Advertisment

இதை முற்றிலுமாக மறுத்துள்ள கணேஷ் ஆச்சார்யா, தன் மீது பொய்யாக பாலியல் புகாரளித்த அந்த நடன கலைஞர் மீது அவதூறு வழக்கு தொடருவேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடன நடிகை கொடுத்த புகார் தொடர்பாக போலீஸார் கணேஷ் ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கணேஷ் ஆச்சார்யாவுக்கு உடந்தையாக செயல்பட்டு நடனக்கலைஞரை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக ஜெயஸ்ரீ கேல்கர், பிரீத்தி லாட் ஆகிய இரண்டு பெண்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.