/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_70.jpg)
நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது 'தக்ஸ்'. ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ள இப்படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து பேசினர்.
இயக்குநர் பிருந்தா பேசுகையில், “ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில்ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குகொஞ்சம் தயக்கமாக;சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகுஅவருக்கு ஒரு நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் போலவே சக்தி வாய்ந்தவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர்.அவருக்குசிறந்த எதிர்காலம் உள்ளது. இந்த நேரத்தில் உதவி இயக்குநர் ராமை நினைத்துக் கொள்கிறேன். அவர் இப்போது எங்களுடன் இல்லை. அவரது உழைப்பு படத்தில் இருக்கிறது. முழு திரைப்படத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கிறேன்" என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசுகையில், “இசை இயக்குநராக நான் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளேன்.அந்தப் படங்களின் கதைகளைகேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும்.ஆனால், படத்தின் இறுதிப்பதிப்பு பார்க்கும்போது ஏமாற்றமாகிவிடுகிறது. எந்தத் திரையுலகிலும் இது சகஜம் தான்.ஆனால், தக்ஸ் திரைப்படம் இதில் தனித்துவம் வாய்ந்தது. இதன் இறுதிப்பதிப்பு அருமையாக வந்துள்ளது. பிருந்தாஇசை மற்றும் பாடல்களில் எந்த தலையீடும் செய்யவில்லை. அதே போல் எந்த சமரசமும் இல்லாமல்தான் சொன்னதைச் சரியாகப் படமாக்கியிருக்கிறார்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)