Advertisment

அஜித் படத்தில் பணியாற்றிய நடன இயக்குநர் மரணம்

Dance director who worked with Ajith dies

சின்னா, தமிழ்திரைத்துறையில்80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர். மேலும் முன்னணி நடன இயக்குநர்களில்ஒருவராகத்திகழ்ந்தவர். சலீம்,சேஷூ,வேம்பட்டிசத்தியம்,பசுமர்த்திகிருஷ்ணமூர்த்தி, போன்ற நடனஇயக்குநர்களிடம்உதவி நடனஇயக்குநராகபணியாற்றியிருக்கிறார்.பாக்கிய ராஜ்இயக்கத்தில் வெளியான 'தூரல்நின்னுபோச்சு' படம் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து 'வைதேகி காத்திருந்தாள்', அஜித்தின் முதல் படமான 'அமராவதி', 'செந்தூர பாண்டி', 'வானத்தைபோல' உள்ளிட்ட 200-க்கும்மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் நடன இயக்குநர் சின்னா நேற்று (15.06.2022) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். சின்னா, சின்ன திரை நடிகை மற்றும் நடன இயக்குநருமானஜெனிபரின்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe