Advertisment

லைகா தயாரிப்பில் 'டாடா' பட இயக்குநர்

dada movie director next with lyca production

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாடா'. நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை முன்னணிதயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

லைகா நிறுவனம் தற்போது கமலின் இந்தியன் - 2, ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' மற்றும் அஜித்தின் 62வது படத்தை தயாரிக்கிறது.

lyca
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe