bhfhdsfh

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாறன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏறக்குறைய படமாக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், நடிகர் தனுசின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் 44வது படமாக உருவாகவுள்ள இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் நீண்ட நாட்களாகவே மித்ரன் ஜவஹர் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

gfrhrde

‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ திரைப்படங்களைப் போன்றே காதல் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில், நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் மற்றும் நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது முதல் நாயகியாக நித்யா மேனனும், இரண்டாவது நாயகியாக ராஷி கண்ணாவும் நடிக்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இயக்குநர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய படங்களில் தொடர்ந்து கேரள நடிகைகளுக்கு முன்னுரிமை அளித்துவரும் தனுஷ் இப்படத்திலும் அதே செண்டிமெண்டை பின்பற்றியுள்ளனர்.

Advertisment