vdgv

Advertisment

இசையமைப்பாளர் கிறிஸ்டி, சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்தவர். கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேற்கத்திய இசை என்று மூன்று வகை இசையிலும் பயிற்சி பெற்று,15 ஆண்டுகள் செலவழித்துத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டு சினிமாவில் களம் காணவுள்ளார்.

alt="vdvd" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="48f8c69f-e871-462b-80a6-60a7f49a63cd" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_35.jpg" />

அவர் இப்போது 'நறுவி', 'வன்முறைப்பகுதி' 'குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் ' என மூன்று படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவை விரைவில் வெளியாக உள்ளன. இதற்கிடையே நேரத்தை விரயமாக்காமல் தானே ஒரு கதை எழுதி 'முற்றுப்புள்ளி' என்றொரு ஐந்து நிமிட மியூசிக் வீடியோ ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். சமூகத்தில் இன்றைக்குப் பரவலாக அறியப்படும் பிரச்சினைகளான குழந்தையின்மை, கந்துவட்டிக் கொடுமை, குழந்தைகள் தத்தெடுப்பது என மூன்று கருத்துக்களை மையமாக வைத்து உருவாக்கியுள்ள இந்த 'முற்றுப்புள்ளி’ சிங்கிள் வீடியோ ஆல்பத்தை இசையமைப்பாளர் டி. இமான் பார்த்து, பாராட்டி வாழ்த்தியதுடன், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு சமூக ஊடகங்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

Advertisment

alt="bdbx" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="77112d62-0beb-41de-8c05-febbd6ffdaa2" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip-Article-inside-ad-500x300_8.jpg" />