தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் துணை நடிகர் பிரபு. தனுஷின் 'படிக்காதவன்' படத்தில் அவருடைய தங்கையைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சமீப காலமாகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபு, சிகிச்சைக்காக போதிய பண வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனை அறிந்த இசையமைப்பார் டி. இமான் சிகிச்சை செலவை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இதையடுத்து ஆதரவின்றி இருந்த பிரபுவின் உடலுக்கு டி. இமான் இறுதிச் சடங்குகளைச் செய்து அவரது உடலைத்தூக்கிக் கொண்டு போய் கொள்ளி வைத்தார். டி. இமானின் இந்தச் செயல் பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் பாராட்டையும் பெற்று வருகிறது.