/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/93_23.jpg)
கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் டி. இமான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது இசையால் பலரையும் கவர்ந்த இமான் அடுத்ததாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின்படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.இதனிடையே இசையமைப்பாளர் டி.இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரைதிருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்உள்ள நிலையில், கடந்த ஆண்டு தனது மனைவியை இமான் சட்ட ரீதியாக விவாகரத்து செய்தார். இது திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில்,இமான் தன்னுடைய முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட்க்குஎதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனது இரண்டு மகள்களுடைய பாஸ்போர்டுகள் தன்னிடம் இருக்கிறது. ஆனால் மோனிகா அதை மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றநிலையில், மண்டலபாஸ்போர்ட்அதிகாரி மற்றும் மோனிகா இருவரும்இது குறித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)