ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ரஜினியின் 168வது படத்தை சிறுத்தை சிவா இயக்கயுள்ளார்.

Advertisment

imman

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியுடன் மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த புதிய படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையோடு தற்போது திடீர் பயணமாக இமயமலை சென்றுள்ளார். அவர் சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Advertisment