நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் நேற்று இசையமைப்பாளர் டி.இமானின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சூர்யாவின் 40வது படமாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட நாயகி ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வரும் பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.