d 50 update aparna balamurali joined cast

அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார் தனுஷ். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை தனுஷின் 'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

இதனிடையே தனது 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால் மற்றும் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் கமிட்டானதாக கூறப்பட்டது. இதையடுத்து விஷ்ணு விஷால், படத்தின் பெயரை குறிப்பிடாமல் மற்ற படங்களில் கமிட்டாகியுள்ளதால் ஒரு படத்தின் என்னால் கலந்து கொள்ளமுடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டது தனுஷ் 50 படம் தான் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘தனுஷ் 50’ படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு விஷால் கமிட்டான கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.