Advertisment

போலீஸார் வழக்குப் பதிவு: விரைவில் கைது செய்யப்படுவாரா ஸ்ரீரெட்டி?

தெலுங்கு திரையுலகில் துணை நடிகையாக ஒருசில படங்களில் நடித்திருந்த நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக்கொண்டனர் என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் சமூக வலைதளங்களில் புகாரளித்த லிஸ்ட்டில் தெலுங்கு திரையுலகின் உட்ச நட்சத்திரங்களும் இருந்தது. அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.

Advertisment

sri reddy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் உட்சநட்சத்திரமான பவன் கல்யாண், மூன்று திருமணம் செய்தவர், இவரால் பல பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், அரசியலுக்கு சரியானவர் இல்லை என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

Advertisment

இதுபோல் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் மீதும் அவதூறு கூறினார். இதையடுத்து கராத்தே கல்யாணியும், ராகேசும் சைபர் கிரைம் போலீசில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தனர்.

இதையடுத்து ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீரெட்டி விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.

telugu srireddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe