Advertisment

"உண்மை கண்டிப்பா ஜெயிக்கும்..." - கஸ்டடியில் நாகசைதன்யா

custody trailer released

Advertisment

வெங்கட்பிரபு தற்போது நாகசைதன்யாவை வைத்து 'கஸ்டடி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 12 ஆம் தேதி (12.05.2023) திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில், சிவா என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யா வருகிறார். காவல் நிலையத்தில் இருந்து வில்லன் அரவிந்த் சாமி தப்பித்து விடுகிறார். பின்பு அவரை பிடித்தாரா இல்லையா என ஒரு பக்கம் கதை நகர்கிறது. மறுபக்கம் அவர் காதலியான க்ரீத்தி ஷெட்டிக்கு வேறொரு இடத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது. இதனால் க்ரீத்தி ஷெட்டியை கரம் பிடித்தாரா அரவிந்த்சாமியை கண்டுபிடித்தாரா என்பதை ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது.

இந்த ட்ரைலரில்நாகசைதன்யா பேசும், "ஒரு தடவை உண்மைக்காக நின்னு பாரு... உன் லைஃபே மாறும்", "உண்மை ஜெயிக்க லேட்டாகும். ஆனா... கண்டிப்பா ஜெயிக்கும்" உள்ளிட்ட வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

custody venkat prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe