CSpace India’s first government-owned OTT platform launched in Kerala

மலையாள திரையுலகம் தற்போது தன் மார்க்கெட்டை அதிகரித்து வருகிறது. சிறு பட்ஜெட்டில் எடுத்து பெரிய லாபத்தை ஈட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாளத்தை தாண்டி தமிழிலும் பெரும் வரவேற்பை பெற்று, உலகம் முலுவதும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் மம்மூட்டியின் பிரமயுகம் மற்றும் ப்ரேமலு உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில் கேரள அரசாங்கம் சி-ஸ்பேஸ் என்ற ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் உள்ள கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைத்துள்ளார். இந்தியாவில் அரசாங்கத்திற்கு சொந்தமான முதல் ஓடிடி தளமாக இது விளங்குகிறது.

சி-ஸ்பேஸ் ஓடிடி தளம் மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் (KSFDC) நிர்வகிக்கப்படும் எனவும், மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த ஓடிடி தளத்தில், 35 திரைப்படங்கள், 6 ஆவணப்படங்கள் மற்றும் 1 குறும்படம் உட்பட 42 திரைப்படங்கள் தற்போது உள்ளது. இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பது60 நிபுணர்களைக் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க ரூ. 75 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.