Skip to main content

"மக்களை பழி சொல்லும் பிரபலங்கள்..."- சி.எஸ். அமுதன்  ட்வீட்

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்தை நெருங்குகிறது.

  cs amudhan


தற்போது இந்தியாவிலும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும், சேலம், திருப்பூரில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதனால் மக்கள் பெரும்பாலானோர் அதிர்ச்சிக்குள்ளாகி கூட்டம், கூட்டமாக கடைகளுக்கு சென்று நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ். அமுதன், “தங்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளால் அரசுகள் நடத்தப்படுகின்றன. இதில் பெரும்பாலானோர் தகுதியற்றவர்கள். இதை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஆனால், இன்று ஷாப்பிங் சென்றுள்ள மக்களை பழி சொல்லும் பிரபலங்களுக்கு இருக்கும் தனிச் சலுகை அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் உள்ளது. உங்கள் வட்டத்தைத் தாண்டியிருக்கும் உலகம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?" என்று தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அமுதன் சினிமேட்டிக் யூனிவர்ஸ் - கவனம் ஈர்த்த விஜய் ஆண்டனி பட ப்ரோமோ

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

vijay antony raththam movie new promo

 

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரத்தம்' . இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்பினிடிவ் ஃபிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். இப்படம் கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளி வருகிற 6 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. 

 

அந்த வகையில் தற்போது ஒரு ப்ரோமோ வீடியோவை இயக்குநர் அமுதன் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் ஆண்டனி ரத்தம் பட கெட்டப்புடன் மழையில் நடந்து செல்கிறார். அப்போது சதீஷ், தமிழ் படம் 2 பட கெட்டப்பில் விஜய் ஆண்டனியை இடித்து விடுகிறார். பின்பு அமுதன் சினிமேட்டிக் யூனிவர்ஸ் இருப்பதாகவும் அதற்காக வந்ததாகவும் கூறுகிறார். இந்த ப்ரோமோஷன் வீடியோ தற்போது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. 

 

அமுதன், கடந்த 2018 ஆம் ஆண்டு சிவா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ் படம் 2 எடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது. 

 

 

 

Next Story

"மியூசிக் சொல்லித் தர ரொம்ப கஷ்டப்பட்டார்" - விஜய் ஆண்டனி

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

vijay antony speech in raththam  press meet

 

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரத்தம்' . இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்பினிடிவ் ஃபிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். இப்படம் நேற்று (28 ஆம் தேதி) வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளி, அடுத்த மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. 

 

இந்த நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி தனது இரண்டாவது மகள் லாராவுடன் கலந்து கொண்டார். கடந்த 19 ஆம் தேதி விஜய் ஆண்டனியின் முதல் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, "அமுதன் என்னுடைய நண்பன். அவருடைய அப்பா எனக்கு மியூசிக் சொல்லித் தர ரொம்ப கஷ்டப்பட்டார். மியூசிக் தெரியாம மியூசிக் பண்ண ஆரம்பிச்சேன். அது அவருக்கு தெரியும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு கத்துக் கொடுக்க நிறைய முயற்சிகள் செய்தார். 

 

அமுதனுடைய காமெடி படங்கள் எல்லாரும் பாத்திருக்கோம். ஆனால் ரிலீஸாகாத அவருடைய இரண்டாவது படத்தில் ஒரு சிறிய காட்சியை பார்த்திருக்கிறேன். ஒரு மிகப்பெரிய ஸ்டார் ஹீரோவை வைத்து ஒரு காட்சியை எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. இயக்குநர் அமுதன் மீது எப்போதும் எனக்கு ஒரு மரியாதை உண்டு. ரொம்ப நாளாக அவருடன் பணியாற்ற வேண்டும் என்று நினைத்து ஒருவழியாக 10 வருடம் கழித்து வாய்ப்பு கிடைத்துள்ளது. 

 

இசை ஞானத்தோடு இசையமைக்கிற இசையமைப்பாளர்கள் குறைவு தான். அப்படி ஒருவர் தான் இசையமைப்பாளர் கண்ணன். இந்த படத்தில் அருமையாக இசை அமைத்திருக்கிறார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்.