இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்றது. இதற்கான கடைசி கட்ட மக்களவை தேர்தல் நேற்று (19/05/2019) நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது. இதில் நியூஸ் 18 தொலைக்காட்சி, இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் இந்தியா முழுவதும் பாஜகவே அதிக தொகுதிகள் இடம்பிடிக்கும் என்று வெளியிட்டுள்ளனர்.

Advertisment

cs amudhan

இதனை அடுத்து பிரபலங்கள் பலரும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தமிழ்ப்படம், தமிழ்ப்படம்-2 உள்ளிட்ட படங்களை இயக்கிய சி.எஸ். அமுதன் தனது ட்விட்டர் பதிவில், “இந்தத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைப் பார்த்தபின், தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலில் வெற்றிபெறப்போகிறது என்பது தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

alt="sasasa" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="542108eb-b520-4456-9582-14f09b1936aa" height="121" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105_10.png" width="354" />

Advertisment

பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பதை மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார் சி.எஸ்.அமுதன் என்பது குறிப்பிடத்தக்கது.