‘தமிழ்ப் படம்’ இயக்குநருடன் இணையும் விஜய் ஆண்டனி!

vijay antony

‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சி.எஸ்.அமுதன், அடுத்ததாக நடிகர் விஜய் ஆண்டனியை நாயகனாக வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளது. ‘தமிழ்ப் படம் 2’வில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களே இந்தப் படத்திலும் பணிபுரிய உள்ளனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நடிகர் விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துவருவதால், அப்படங்களை நிறைவு செய்த பின்னரே, இப்படத்தில் கவனம் செலுத்த உள்ளார்.

இப்படம் விஜய் ஆண்டனியின் வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. காமெடி பட இயக்குநர் என்ற தன் மீதுள்ள முத்திரையை மாற்றும் நோக்கோடு, இம்முறை த்ரில்லர் வகை திரைப்படத்தை சி.எஸ்.அமுதன் கையில் எடுத்துள்ளாராம்.

vijay antony
இதையும் படியுங்கள்
Subscribe