க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள்... சிறந்த படத்திற்கு 'சூரரைப் போற்று' பரிந்துரை!

ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் க்ரிட்டிக்ஸ் சாய்ஸ்(விமர்சகர்களின்தேர்வு)விருதுகள்,உலகம் முழுதும் உள்ள பொழுதுபோக்குத்துறையினரால்கொண்டாடப்படும் விருதுகளில் முதன்மையானதாக உள்ளது.

வருகிற மார்ச் 7 ஆம் தேதி, கலிஃபோர்னியாவில் '26 ஆவதுக்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள்' வழங்கப்பட இருக்கிறது.இந்த விருதில் இந்திய சினிமாக்களுக்கான நாமினிக்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இதில், பல தமிழ்த் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் கில்ட் மற்றும் மோஷன் கன்டன்ட்குழு ஆகியவை விஸ்டாஸ் மீடியா கேப்பிட்டலுடன் இணைந்துஇந்தப் புகழ்பெற்ற விருது வழங்கும் விழாவை நடத்த இருக்கின்றன.

இந்திய சினிமா ரசிகர்களுக்காக,9 பிரிவுகளில் கீழ் க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள்தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் கில்ட் தலைவரான அனுபமா சோப்ரா கூறும்போது, “இது ஒரு சவாலான ஆண்டு. இந்த ஆண்டில் கூட, சிறந்த தரமான படைப்புகள் வெளியாகியுள்ளது. க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளின் மூன்றாம் பதிப்பின் பரிந்துரைகளேஅதற்குச்சான்றாகும். அனைத்து இந்திய மொழித் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் குறும்படங்களில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைக்கவுரவிப்பதில்நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

மேலும், மோஷன் கன்டன்ட் குழுமத்தின்,இந்திய வணிகத் தலைவர் சுதீப் சன்யால், “திறமையானவர்களைஅங்கீகரித்ததற்காக பொழுதுபோக்குத் துறையின்பாராட்டுகளைப் பெறுவது மிகவும் திருப்தியாக உள்ளது. இந்த நேர்மறையான சூழ்நிலையில்,எங்கள் பரிந்துரைபட்டியலை வெளியிடுவதில்மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பரிந்துரைகளின் பட்டியல் பின்வருமாறு,

சிறந்த திரைப்படம்

சார் (இந்தி)

ஈப் அலாய்ஓ(இந்தி)

போன்ஸ்லே (இந்தி)

விடோ ஆஃப் சைலன்ஸ் (உருது)

அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்)

தப்பாட்(இந்தி)

சிண்டு காபர்த்டே(இந்தி)

சூரரைப் போற்று (தமிழ்)

சி யூ சூன் (மலையாளம்)

தஷேர் கவர்(வங்காளம்)

சிறந்த இயக்குனர்

ரோஹேனா கெரா,சார் (இந்தி)

ப்ரதீக் வாட்ஸ்,ஈப் அலாய்ஓ(இந்தி)

சச்சி,அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்)

தேவாஷிஷ் மகிஜா,போன்ஸ்லே (இந்தி)

அனுபவ் சின்ஹா,தப்பாட்(இந்தி)

சிறந்த நடிகர்

மனோஜ் பாஜ்பாய்,போன்ஸ்லே (இந்தி)

ஷார்துல் பரத்வாஜ்,ஈப் அலாய்ஓ(இந்தி)

பிஜு மேனன்,அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்)

ஃபஹத் பாசில், ட்ரான்ஸ்(மலையாளம்)

நவாசுதீன் சித்திக்,சீரியஸ் மென் (இந்தி)

சிறந்த நடிகை

டில்லோட்டாமா ஷோம்,சார் (இந்தி)

டாப்சி பண்ணு,தப்பாட்(இந்தி)

ஸ்வஸ்திகா முகர்ஜி,தஷேர் கவர்(வங்காளம்)

ஐஸ்வர்யா ராஜேஷ்,கா/பெ.ரணசிங்கம்(தமிழ்)

ஷில்பி மார்வாஹா,விடோ ஆஃப் சைலன்ஸ் (உருது)

cnc

சிறந்த துணை நடிகர்

பங்கஜ் திரிபாதி,குஞ்சன் சக்சேனா:கார்கில் பெண் (இந்தி)

அனில் நெடுமங்கட்,அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்)

பிரகாஷ் ராஜ், பாவக் கதைகள் (தமிழ்)

ராஜ்கும்மர் ராவ், லூடோ (இந்தி)

பங்கஜ் திரிபாதி,லூடோ (இந்தி)

சிறந்த துணை நடிகை

கீதிகா வித்யா ஒஹ்லியன்,தப்பாட்(இந்தி)

சாய் பல்லவி,பாவக் கதைகள் (தமிழ்)

இந்திரா திவாரி,சீரியஸ் மென் (இந்தி)

கவுரி நந்தா,அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்)

ஊர்வசி,வரணே அவஷ்யமுண்ட்(மலையாளம்)

சிறந்த எழுத்து

போன்ஸ்லே (இந்தி)

அய்யப்பனும் கோஷியம் (மலையாளம்)

தப்பாட்(இந்தி)

சிண்டு காபர்த்டே (இந்தி)

சூரரைப் போற்று (தமிழ்)

சிறந்த ஒளிப்பதிவு

சித்தார்த் திவான், புல்புல் (இந்தி)

அனுராக் பாசு & ராஜேஷ் சுக்லா, லூடோ (இந்தி)

ஏ.எம். எட்வின் சாகே,அந்தகாரம் (தமிழ்)

நிகேத் பொம்மிரெட்டி,சூரரைப் போற்று (தமிழ்)

தன்வீர் மிர், சைகோ (தமிழ்)

சிறந்த எடிட்டிங்

மகேஷ் நாராயணன்,சி யூ சூன் (மலையாளம்)

ராமேஸ்வர் எஸ் பகத், புல்புல் (இந்தி)

ரஞ்சன் ஆபிரகாம்,அய்யப்பனும் கோஷியம் (மலையாளம்)

ஆனந்த் சுபயா, லூட்கேஸ் (இந்தி)

சதீஷ் சூரியா, சூரரைப் போற்று (தமிழ்)

aishwarya rajesh Critics choice awards
இதையும் படியுங்கள்
Subscribe