crime patrol actress shabreen arrested

Advertisment

க்ரைம் பேட்ரோல் என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருபவர் நடிகை ஷப்ரீன். இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த பிரிஜேஷ் சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பிரிஜேஷ் சிங் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரிஜேஷ் சிங்கின் மூன்றரை வயது உறவுக்கார சிறுவனான பிரின்ஸ் என்பவர் கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரிஜேஷ் சிங்கின் குடும்பத்தார் காவல் துறைக்கு புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் விசாரித்த காவல் துறையினர் அந்த சிறுவனை கடத்தியது நடிகை ஷப்ரீன் எனத் தெரிய வந்து அவரை கைது செய்துள்ளனர்.

பிரின்ஸ், அவர் படிக்கும் பள்ளியில் இருந்த போது நடிகை ஷப்ரீன் சென்று அவரை அழைத்து சென்றுள்ளார். தனது காதலுக்கு பிரிஜேஷ் சிங் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த குற்றத்தை அவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரின்ஸுக்கு ஏற்கனவே நடிகையை தெரிந்துள்ளதால் அவர் அழைத்ததும் சென்றுவிட்டார். மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக பள்ளி அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு அழைத்து சென்றுள்ளார். பிரின்ஸை காணவில்லை என்றதும் அவரது குடும்பத்தினர் பள்ளியில் விசாரித்த போது மருத்துவரிடம் பிரின்ஸை அழைத்து செல்வதாக சொல்லி ஒரு பெண் அழைத்து சென்றதாக சொல்லியுள்ளனர்.

Advertisment

இதையடுத்து அவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.பின்பு பள்ளியில் அருகே உள்ள சீசிடிவி-யை ஆராய்ந்த காவல் துறையினர், அதில் நடிகை சிறுவனை ஆட்டோ ரிக்‌ஷாவில் கடத்தி சென்றது பதிவாகியுள்ளது. அவருடன் மற்றொரு பெண்ணும் இருந்திருக்கிறார். இதையடுத்து அந்த மற்றொரு பெண் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.