Skip to main content

பிரபல டிவி சீரியல் நடிகர் காலமானார்!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

shafique ansari


’க்ரைம் பேட்ரோல்’ என்ற ஹிந்தி டிவி சீரியலில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ஷஃபிக் அன்சாரி. 52 வய்தாகும் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய் காரணமாக காலமானார். 

அன்சாரி, கடந்த இரண்டு வருடங்களாக தொராசிக் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதமாக நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்காகவும் சிகிச்சை பெற்று வந்தார்.


இதனை ‘சினி டிவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷன்’ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி பதிவிட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக இந்தத் துறையில் பயணத்தைத் தொடங்கிய அன்சாரி, நேரடியாக நடிகராகவில்லை. முதலில் துணை இயக்குனர் மற்றும் திரை எழுத்தாளர் என்று படிப்படியாக உயர்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார்

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

 TV comedy actor Kovai Guna passed away

 

'அசத்தப் போவது யாரு' உள்ளிட்ட பல  தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி மூலம் பிரபலமானவர் கோவை குணா. இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கோவையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவுக்கு தொலைக்காட்சி பிரபலங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Next Story

தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு 40 இன்ச் எல்.இ.டி டி.வி... மாவட்ட நிர்வாகம் முடிவு!

Published on 08/10/2021 | Edited on 09/10/2021

 

 40-inch LED TV for corona vaccinators ... District administration decides!

 

கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு துறைகளையும் இணைத்து தடுப்பூசி விழிப்புணர்வும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி தடுப்பூசி போடப்படுகின்றன. வீடு வீடாக சென்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 

வடக்கு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பின்தங்கியே உள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கென பரிசுகள், பொருட்கள் எல்லாம் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமில் ஊசிபோட்டுக்கொள்ளும் நபர்களில் மூன்று நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 40 இன்ச் எல்.இ.டி கலர் டிவி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மூன்று டிவிகளும் நன்கொடையாக வாங்கப்பட்டுள்ளன.

 

இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா கூறும்போது, ''மெகா தடுப்பூசி முகாம்மில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களை குலுக்கல் முறையில் மூன்று  நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இந்த டிவி வழங்கப்படும்'' என்றார்.