.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/185_14.jpg)
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வழக்கம் போல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இப்போது வரை புள்ளி பட்டியலில் 16 புள்ளிகள் எடுத்து குஜராத் அணி முதல் இடத்திலும் 15 புள்ளிகளுடன் சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில்14 புள்ளிகளுடன் மும்பை அணியும் நான்காவது இடத்தில் 13 புள்ளிகளுடன் லக்னோ அணியும்உள்ளது.
இந்த நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளனர். இருவரும் ரஜினியை பார்த்த மகிழ்ச்சியில் தங்களது சமூக வலைத்தளத்தில் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரஜினி பற்றி கூறியுள்ளனர்.
வெங்கடேஷ் ஐயர் பதிவிட்டிருப்பதாவது, "தலைவர் தரிசனம். இன்றைய நாள் என் இதயத்திலும் நினைவுகளிலும் என்றென்றும் பதிந்துவிட்டது. சிறுவயதில் என் கனவுகள் அனைத்தையும் வடிவமைத்த ரஜினிகாந்த்தை ஒருவழியாகச்சந்தித்தேன். என்ன ஒரு அனுபவம். அவருடன் பேசும்போது பல வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்தது போல் உணர்ந்தோம்" என பதிவிட்டுள்ளார்.
வருண் சக்கரவர்த்தி பதிவிட்டதாவது, "இரவு வானில் தினமும் ஒரு மில்லியன் நட்சத்திரங்களை பார்க்கலாம். ஆனால் இந்த சூப்பர் ஸ்டாரைப் பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது தான் நடக்கும். அது நடந்தது.அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினராக தீவிரமாக உணர்ந்தேன். லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ் (LIVING WITH HIMALAYAN MASTERS) என்ற அற்புதமான புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)