Skip to main content

‘சொல்கிறேன் பக்தா’... கைலாச நாடு குறித்த அஸ்வினின் சந்தேகத்திற்கு கிண்டலாக பதிலளித்த சதீஷ்...

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

நித்தியானந்தாவின் தனி நாடு என கூறப்படும் கைலாஸாவில் விசா வாங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் செய்த ட்வீட் வைரலாகி வருகிறது.
 

nithyananda


நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என இந்துக்களுக்கான ஒரு நாடாக நித்தியானந்தா அதனை உருவாக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

iruttu


இந்நிலையில், அந்நாட்டிற்கு எப்படி விசா வாங்குவது என அஸ்வின் கேட்டுள்ள ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கைலாஸாவில் விசா பெறுவதற்கான நடைமுறை என்ன ?? என அவர் போட்டுள்ள அந்த பதிவிற்கு பலரும் பலவிதமான பதில்களை அளித்து வருகின்றனர்.


இந்நிலையில், இந்த ட்வீட்டிற்கு நான் சொல்கிறேன் பக்தா என்று தமிழக நகைச்சுவை நடிகர் சதீஷ், ஆன்மீகவாதி போல வேடமிட்ட புகைப்படத்துடன் கிண்டலாக ரிப்ளை செய்துள்ளார். இந்த ட்வீட்டும், ரிப்ளையும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர் சர்ச்சையில் பாஸ்கரானந்தா; பழங்கால முருகன் சிலை பறிமுதல்

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Bhaskarananda in serial controversy; Seizure of ancient Murugan idol

 

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ஆசிரமத்தை இடித்து விட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் பாஸ்கரானந்தா. பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், நான் தான் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறினார். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகச் சிலைகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் வெளிநாடுகளில் அவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது. காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் கோவை பாஸ்கரானந்தா சாமியார் வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். 

 

3 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட இந்த சோதனையில் 200 கிலோவிற்கும் அதிகமான எடையுடன் 4 அடி உயரம் கொண்ட ஐம்பொன் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலை வைத்திருப்பதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் காவல்துறையினர் அதனைக் கைப்பற்றிச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். 

 

கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சிலையை ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப் பிரியா சிலையின் தொன்மையினை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோகச்சிலைகள் பாதுகாப்பு மையத்தில் அந்தச் சிலை ஒப்படைக்கப்பட்டது.

 

 

Next Story

சென்னை மாணவி கொலை வழக்கு; போலீஸ் கமிஷனர் புதிய உத்தரவு

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

Chennai student sathya rail case; Chennai Police Commissioner new order!

 

சென்னை, கிண்டி பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற இளம்பெண்ணை கடந்த சில தினங்கள் முன்பு சதீஷ் என்ற இளைஞர் ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தலைமறைவான சதீஷ் காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் அன்றிரவே கைது செய்யப்பட்டார்.   

 

இதைத்தொடர்ந்து மாணவியின் தந்தை மதுபானத்தில் விஷம் கலந்து குடித்ததில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஸ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். 

 

இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சதீஷிடம் பல்வேறு வகையான விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், மாணவியை ரயிலில் தள்ளிக் கொன்ற சதீஷ் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. குண்டாஸ் போடுவதற்கு முதலில் சி.பி.சி.ஐ.டி பரிந்துரை செய்தது. இதன் பேரில் சென்னை காவல் ஆணையர் உத்தரவின் கீழ் சதீஷ் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.