The crew has released the latest update of Udayanithi movie

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நெஞ்சுக்கு நீதி'. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'நெஞ்சுக்கு நீதி' படத்தை படக்குழு சென்சாருக்கு அனுப்பியுள்ளது. சென்சார் போர்ட்இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் இந்தியில் வெற்றிபெற்ற 'ஆர்டிக்கள் 15' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.