kamal hassan

கடந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி நடிகரும், வசன எழுத்தாளருமான க்ரேஸி மோகன் மறைந்தார். தனது காமெடியான எழுத்துகளால் அனைவரையும் சிரிக்க வைத்த மோகனுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.

Advertisment

க்ரேஸி கிரியேஷன்ஸ் மற்றும் ஜப்பான் தமிழ்ச்சங்கம் இணைந்து மறைந்த க்ரேஸி மோகனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அன்று மரியாதை செலுத்த உள்ளனர்.

Advertisment

கரோனாவால் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், கமல்ஹாசன் முன்னிலையில் சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பல்வேறு சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்வில், நாசர், பிரபு, கணேசன், குஷ்பு, கே.எஸ்.ரவிகுமார், சந்தானபாரதி, முனைவர். கு. ஞானசம்பந்தம் ஆகிய பிரபலங்களும் கலந்துகொள்கின்றனர்.

Advertisment

மேலும், இந்நிகழ்சியில் ‘க்ரேஸி மோகன் சிறப்பு பாடல்’ கமல்ஹாசனால் வெளியிடப்படுகிறது.