Advertisment

மாரி செல்வராஜுக்கு கம்யூனிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் வாழ்த்து

cpm leader ramakrishnan wishes mari selvaraj regards vaazhai success

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்காவது படமாக கடந்த 23ஆம் தேதி வெளியான படம் வாழை. இப்படம் அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியுள்ளனர்.

Advertisment

இப்படத்திற்கு பாரதிராஜா, மணிரத்னம், வெற்றி மாறன், ராம், மிஷ்கின், நெல்சன், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழுவினரைப் பாராட்டினர். இதையடுத்து சிறப்பு காட்சியை பார்த்த பாலா மனமுடைந்து மாரி செல்வராஜை கட்டியனைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தனுஷ், பா.ரஞ்சித், கார்த்தி, லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ், கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி, ஹிப்ஹாப் ஆதி, ஷங்கர் எனப் பல்வேறு பிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக படக்குழுவை பாராட்டினர்.

Advertisment

திரை பிரபலங்களைத் தாண்டி அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன்எம்.பி, சீமான்ஆகியோரும்படக்குழுவினரைப் பாராட்டினர். இதில் திருமாவளவன் மாரி செல்வராஜ்வீட்டிற்குசென்று அவரது குடும்பத்தினருக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் சி.பி.எம் கட்சியின் அரசியல்தலைமைக்குழுஉறுப்பினர் ராமகிருஷ்ணன் மாரி செல்வராஜை நேரில் சந்தித்துவாழ்த்துகூறியுள்ளார். மேலும்அவருக்குபொன்னாடை அணிவித்து ஒரு புத்தகத்தையும் பரிசாக வழங்கினார். இது தொடர்பானபுகைப்படங்களைத்தனதுஎக்ஸ்பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

mari selvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe