தெலுங்கில் ராம் ஜகதீஷ் இயக்கத்தில் கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியான படம் ‘கோர்ட்’. இப்படத்தை பிரசாந்தி திபிர்னேனி தயாரித்திருக்க நானி வழங்கியிருந்தார். இப்படத்தில் பிரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு விஜய் பல்கானின் இசையமைத்துள்ளார். இப்படம் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தும் முறையைப் பற்றி பேசியது. மேலும் அச்சட்டத்தில் சில திருத்தங்கள் வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது. 

Advertisment

தெலுங்கை தாண்டி தமிழ், உள்ளிட சில மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.58 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ஓடிடியில் வெளியான பிறகும் பல தரப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இப்படம் தமிழில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

தமிழ் ரீமேக்கின் உரிமையை நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் பிரசாந்த், தேவயானி மகள் பிரியங்கா, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் கிரித்திக் ஆகியோர் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.