Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தக்கோரிய வழக்கு - தொகுப்பாளருக்கு நோட்டீஸ்

court send notice to nagarjuna for bigboss show

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகர்ஜுனா தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது எனக் கூறி நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி ஒரு பொதுநல வழக்கு ஆந்திராஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

alt="court send notice to nagarjuna for bigboss show" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b72beb56-1cf5-4e63-be9a-fd208ad4cdd7" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-x-300_15.jpg" />

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி இந்த நிகழ்ச்சிதொகுப்பாளர் நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் நிகழ்ச்சிதயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 14 நாட்களுக்குநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

bigboss nagarjuna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe