சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '100'. ஆரோ சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் இன்று (மே 9) வெளியாவதாக அறிவிக்கப்பட்டு விளம்பரங்கள் வெளியாகின.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adharva 100 - Copy.jpg)
சிறப்புக்காட்சிகளில் படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டி விமர்சனங்களை வெளியிட்டனர். ஆனால், இன்று காலை திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. படம் குறித்த ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் படம் வெளியாகவில்லை என்று தகவல் வந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/court order.jpg)
இன்று நடந்த விசாரணையின் முடிவில் 'பலூன்' படம் தொடர்பான காப்பி ரைட் வழக்கில் '100' படத்தின் வெளியீட்டை தடை செய்ய முடியாது என்றும் '100' படம் வெளியாகலாம் என்றும் குறிப்பிட்டு ஆணை வெளியிட்டது நீதிமன்றம். இதனால் நாளை '100' படம் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதர்வா இதற்கு முன்பு நடித்து வெளியான 'இமைக்கா நொடிகள்' படம் வெளியான போதும் சில தடைகள் ஏற்பட்டு தாமதமானது. பின்னர் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அது போல '100' படமும் வெற்றி பெறுமா என்பதை நாளை பார்ப்போம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)