ADVERTISEMENT

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு; நீதிமன்றம் அதிரடி 

05:22 PM Jul 29, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஆண்டு பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாகக் கூறி மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘நான் கடந்த நவம்பர் 2ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்றபோது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியைப் பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது அவரை பார்த்துப் பேசிவிட்டு வாழ்த்துக் கூறினேன். அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி தவறான வார்த்தையில் திட்டியதுடன் தன்னுடைய சாதியைக் குறிப்பிட்டுப் பேசியதாகக் கூறியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன்னைத் தாக்கியதாகக் கூறிய மகா காந்தி, அவர்கள் இருவர் மீதும் குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதிக்குச் சம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய ஆதாரம் இல்லாமல் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் விஜய் சேதுபதியிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது செல்லாது கூறியதுடன், விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT