court ordered amaran movie release in illegal websites

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே டெல்லியில் இராணுவ வீரர்களுக்காக படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அவர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Advertisment

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அமரன் படத்தை சட்டவிரோதமாக 1957 இணையதளங்கள் மற்றும் கெபிள் டிவி ஆகியவற்றில் வெளியிடுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமரன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.