irumbu thirai.jpeg

Advertisment

sri devi

நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் உள்ள ஓட்டல் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார். இது திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து தகவல் பரவியதையடுத்து, துபாய் போலீசார் விசாரணை நடத்தி, அதன்பின்னர் உடலை ஒப்படைத்தனர். ஆனால் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் இன்னமும் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. துபாய் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் அம்சம் எதுவும் இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டி இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.