publive-image

பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியான சினேகன், தான் நடத்தி வருகிற சினேகம் என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும், பாஜக பிரமுகரான ஜெயலட்சுமி மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் சினேகன் புகார் அளித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருந்தார்.

Advertisment

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர் .ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

இந்த வழக்கின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குபதிவு செய்து அடுத்த மாதம் 19ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அண்ணா நகர் துணை ஆணையர், மத்தியகுற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளர், திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு நகலை இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார் நடிகை ஜெயலட்சுமி.அப்போது, "பொதுவெளியில் என் மீது அவதூறு பேசியுள்ளார். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த விசாரணையில் சினேகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது" என தெரிவித்துள்ளார்.