Published on 27/07/2022 | Edited on 27/07/2022

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே 'தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ்' சார்பில் 'தி லெஜண்ட்' படத்தை அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, "தி லெஜண்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு 1,262 இணையதளங்கள் மற்றும் இணையதள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.