Advertisment

'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்திற்கு தடை!

natpunna ennanu theriyuma

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

விஜய் டிவி புகழ் கவின் - ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ள 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படம் வரும் ஜூலை 27ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமார் அரவிந்த் டைரக்டு செய்துள்ள இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் சார்பாக ரவீந்தர் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தை வெளியிட தடை கோரி திரைப்பட வினியோகஸ்தர் மலேசியா பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்..... "நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து வாங்கினேன். இதற்காக ரூ.8 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் போட்டேன். அதன்பிறகு பல கட்டங்களாக அவ்வப்போது பணம் கொடுத்தேன். மொத்தம் ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் வழங்கி இருக்கிறேன். ஆனால் திட்டமிட்ட தேதியில் தற்போது படம் வெளியாகவில்லை. இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் போலீசிலும் புகார் அளித்தேன். பணத்தை தராமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 'நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வருகிற 30ஆம் தேதிவரை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

kavin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe