Skip to main content

'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்திற்கு தடை!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
natpunna ennanu theriyuma

 

 

 

விஜய் டிவி புகழ் கவின் - ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ள 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படம் வரும்  ஜூலை 27ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமார் அரவிந்த் டைரக்டு செய்துள்ள இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் சார்பாக ரவீந்தர் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தை வெளியிட தடை கோரி  திரைப்பட வினியோகஸ்தர் மலேசியா பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்..... "நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து வாங்கினேன். இதற்காக ரூ.8 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் போட்டேன். அதன்பிறகு பல கட்டங்களாக அவ்வப்போது பணம் கொடுத்தேன். மொத்தம் ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் வழங்கி இருக்கிறேன். ஆனால் திட்டமிட்ட தேதியில் தற்போது படம் வெளியாகவில்லை. இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் போலீசிலும் புகார் அளித்தேன். பணத்தை தராமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்  'நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வருகிற 30ஆம் தேதிவரை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

Next Story

‘ஒரு நொடி’ - டீசரும் ட்ரைலரும் ஒரே நாளில் வெளியீடு 

Published on 12/04/2024 | Edited on 13/04/2024
oru nodi teaser and trailer released

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு நொடி’. எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.  

இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிட இருக்கிறார்கள். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஆர்யா இதனை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின்டீசரும் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 

இப்படத்தை ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை வழங்குகிறார். மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சஷர்ஸ் தயாரிக்கிறது.