Court bans release of Raghava Lawrence starrer 'Rudran'

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ருத்ரன்'. இப்படத்தில்'ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்' சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 14 ஆம் தேதி (14.04.2023) திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படம் வெளியாவதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் ஹிந்தி உள்ளிட்ட வடமொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் வாங்கியிருந்தது. டப்பிங் உரிமைக்காக ரூ.12.25 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முன்பணம் ரூ.10 கோடி செலுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் ரெவன்சா நிறுவனம் சார்பில், ரூ.10 கோடி செலுத்திய நிலையில்மேலும் ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதுஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிடத்தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.