உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கு சின்னத்திரை நடிகையான நவ்யா சுவாமி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஆம், எனக்குக் கரோனா வைரஸ் டெஸ்ட் பாசிட்டிவ் என வந்திருக்கிறது. உடனே நான் எனது டாக்டரை ஆலோசித்து, என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது என் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து வருகிறேன். இதில் எந்த அவமானமோ, பயமோ இல்லை. விரைவில் நான் பூரண குணமாகி வருவேன்'” என்று தெரிவித்துள்ளார்.