srinath vasistha

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் சினிமா படபிடிப்புகள் நடைபெறாமல் சினிமாவில் பணிபுரிந்த தினக்கூலிப் பணியாளர்கள் பலர் சிரமத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சிலர் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகள் செய்யும் வகையில் உதவி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், பிரபல கன்னட நடிகர் ஸ்ரீநாத் வசிஸ்தா ஒரு அபார்ட்மெண்டில் பாதுகாவலராக பணிபுரிந்துவருகிறார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஃபோட்டோ பகிர்ந்துள்ள அவர், தனது அப்பார்ட்மென்ட்டில் பணிபுரியும் பாதுகாவலருக்குக் கரோனா பாதித்துள்ளதாகவும், மற்ற பணியார்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அதன் காரணமாக அவர் தற்போது பாதுகாவலராக பணிபுரிவதாகவும், முந்தைய நாள் இரவு தனது மகன் பாதுகாவலராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பணி அவருக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.