உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா 302, கேரளா 241, தமிழகம் 234, டெல்லியில் 120, உத்தரப்பிரதேசம் 103, தெலங்கானா 94, ராஜஸ்தான் 93 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கரோனா பாதிப்பால் 38 பேர் உயிரிழந்த நிலையில், 133 பேர் குணமடைந்துள்ளனர். இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய இந்த கரோனா வைரஸ் தற்போது உலகில் பல நாடுகளில் பரவிவிட்டது.இதனால் உலக மக்கள் பலரும் இந்த நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்க சுய தனிமைப்படுத்துதல் செய்துக்கொள்கின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் என்ற டைட்டிலையும்,தற்போது நடைபெறும் வைரஸ் தொற்றை மையமாக வைத்தும் படம் ஒன்று உருவாகியுள்ளது.கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குனர் முஸ்தபா கேஸ்வாரி,இவர் கடந்த ஜனவரி மாதம் கரோனா பரவல் பீதியால் லிஃப்டில் தாக்கப்பட்ட சீன நாட்டவரின் கதையை மையமாக வைத்து படத்தை உருவாக்கியுள்ளார்.இந்தப் படத்திற்கான எழுத்து வேலைகளை ஜனவரி இறுதியில் தொடங்கி, ஃபிப்ரவரி மாதம் கரோனா உலகெங்கும் பரவுவதற்குள் படத்தின் ஷூட்டிங்கையே முடித்துவிட்டார்.
இந்தப் படத்தின் டீஸர் கடந்த மார்ச் 8ஆம் தேதி வெளியாகியுள்ளது.ஆனால், கரோனாவின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளதால் உலகெங்கும் வைரலாகி வருகிறது.