Advertisment

சிம்புவிற்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

corona kumar simbu issue

Advertisment

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. இதையடுத்து வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், "கொரோனா குமார் படத்திற்காக சிம்புவுக்கு முன்பணமாக ரூ. 4.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனால் எங்கள் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தில் ரூ.1 கோடி மட்டுமே சிம்புவுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் ரூ.1 கோடி ரூபாய் உத்தரவாதமாக சிம்பு செலுத்த உத்தரவிட்டது. மேலும்செலுத்தாமல் இருக்கும் பட்சத்தில், மற்ற படங்களில் அவர் நடிக்க தடை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளித்து விசாரணையை ஒத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்போது சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் உத்தரவின்படி ரூ.1 கோடி டெபாசிட் செய்ததற்கான ரசீதை தாக்கல் செய்தார். இதையடுத்து டெபாசிட் செய்யப்பட்ட பணம் 2 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்தகராக மூத்த வழக்கறிஞர் என்.என். ராஜாவை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார். அதோடு சிம்பு மற்ற படங்களில் நடிக்கதடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, அப்படி தடை விதித்தால் பிற நிறுவனங்களுடனான பணிகள் பாதிக்கும் என தெரிவித்து அவர்களின் கோரிக்கையை நிராகரித்தார்.

MADRAS HIGH COURT actor simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe