‘கொரோனா குமார்’ அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி!

vjs

'ரௌத்திரம்' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, அஸ்வின் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பெரிய ட்ரெண்ட் செட்டராக உருமாறிய படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. இந்தப்படத்தை இயக்கியவர்கோகுல். மேலும், 'காஷ்மோரா' மற்றும் 'ஜுங்கா' படங்களைத் தொடர்ந்து மீண்டும் 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா- இரண்டாம் பாகம்' எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில் விஜய்சேதுபதி வீடியோ பதிவு ஒன்றைப்பகிர்ந்துள்ளார். அதில், இயக்குனர் கோகுல் 'கொரோனா குமார்' என்ற டைட்டிலில் படத்திற்குத் திரைக்கதை எழுதத் திட்டமிட்டிருப்பதாகவும் விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட இருப்பதாகவும்அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கரோனா அச்சுறுத்தல் முடிந்தபிறகு இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஷூட்டிங் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe