ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் மற்றும் ஒரு குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்ததால் படத்திற்கு  மாஸ்  ஓபனிங் கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

Advertisment

இப்படத்தில் ரசிகர்களை கவர்ந்த பிளாஷ்பேக் போர்ஷனில் ரஜினியை டீ-ஏஜிங் செய்ததாகவும் அவருக்கு ஏஐ- தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டப்பிங் பேசப்பட்டதாகவும் சமீபத்தில் ஒரு ருசிகர தகவலை லோகேஷ் தெரிவித்திருந்தார். நாகர்ஜூனாவின் வில்லனிசமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.151 கோடிக்கு மேல் வசூலித்தது. பின்பு நான்கு நாட்களில் ரூ.404 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்போது ரூ.500 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற 11ஆம் தேதி, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.