‘கூலி’; ஆமிர் கான் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

487

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து கடந்த மார்ச் மாதம் முடிந்திருந்தது. இதனிடையே படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பின்பு ‘சிக்குடு வைப்’ என்ற பாடலில் கிளிம்ஸ் வெளியாகியிருந்தது. அடுத்தாக படம் வெளியாகுவதற்கு 100 நாட்கள் தான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்து ஒரு முன்னோட்ட காட்சி வெளியானது. இதில் பின்னணியில் இடம் பெற்ற ‘பவர்ஹவுஸ்’ பாடம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.

486

இதனைத் தொடர்ந்து ‘சிக்குடு வைப்’ பாடலின் மியூசிக் வீடியோ அண்மையில் வெளியாகியிருந்தது. இதில் டி.ராஜேந்தர், அறிவு, நடன இயக்குநர் சாண்டி இடம் பெற்றிருந்தனர். படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாத 27ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் ஆமீன்கான் கதாபாத்திர அறிமுக போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ‘தாஹா’(Dahaa) என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் அவர் புகைப்பிடித்துக் கொண்டு நிற்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Aamir Khan, Actor Rajinikanth Coolie lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Subscribe