cool suresh misbehaviour to journalist in sarakku audio launch

Advertisment

ஜெயக்குமார் இயக்கத்தில் மன்சூர் அலிகான் தயாரித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'சரக்கு'. இதில் கே.எஸ் ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் நடிகர் கூல் சுரேசும் வருகை தந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது.

பின்பு தொகுப்பாளினி கூல் சுரேசை பேச அழைத்தார். கையில் மாலையுடன் மைக் அருகில் சென்ற கூல் சுரேஷ், "மன்சூர் அண்ணன் மீது எனக்கு மனவருத்தம். எல்லாருக்கும் மாலை போட்டீங்க...ஒருத்தருக்கு போட்டீங்களா..." என சொல்லி அருகில் இருந்த தொகுப்பாளினிக்கு திடீரென்று கையில் வைத்திருந்த மாலையை போட்டுவிட்டார். அதை எதிர்பார்க்காத அந்த தொகுப்பாளினி அதிர்ச்சியடைந்து, அந்த மாலையை உடனே கழட்டிவிட்டார்.

இதற்கு அங்கிருந்த பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, உடனே கூல் சுரேஷை அந்த தொகுப்பாளினியிடம்மன்னிப்பு கேட்க சொன்னார் மன்சூர் அலிகான். உடனே கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டார். அது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.