/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20_12.jpg)
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா, ஏ.ஜி.எஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காமெடி நடிகர் சதீஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார். கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார். சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பவித்ரா நாயகியாக நடிக்கும் அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அறிமுக இயக்குநர் இயக்கும் படத்தில் நடிகர் கதிருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)