Advertisment

கன்னடத்தில் தொடங்கப்படும் குக் வித் கோமாளி!

cook with comali

Advertisment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கெடுத்துள்ள புகழ், சிவாங்கி உள்ளிட்ட சிலருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் சிலருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்துள்ளது. தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கன்னடத்திலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது. ஸ்டார் ஸ்வர்ணா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு 'குக் வித் கிரிக்கு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்திய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிககவனம் பெற்ற நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருப்பதால், விரைவில் பிற மொழிகளிலும் இந்நிகழ்ச்சி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay tv
இதையும் படியுங்கள்
Subscribe