Advertisment

யுவனுடன் இணைந்த புகழ்; காமெடியன் டூ ஹீரோ... குவியும் வாழ்த்துக்கள்!

cook with comali pugazh lead role mr zoo keeper

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான புகழ், அஜித்தின் 'வலிமை', அஸ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்' சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து 'யானை','ஏஜென்ட் கண்ணாயிரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். என்னவளே, ஜூனியர் சீனியர் உள்ளிட்ட படங்களை இயக்கியசுரேஷ் இயக்கும்'மிஸ்டர்.ஜுகீப்பர்' என்ற படத்தில் புகழ்நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷெரின்காஞ்ச்வாலாநடிக்கவுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின்ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் காமெடி நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக அறிமுகமாக உள்ளபுகழுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

tamil cinema yuvan shankar raja Vijay tv Pugazh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe