Advertisment

“அஜித் தோளில் கை போட்டு பேசியது... விஜய் சேதுபதி ஊட்டி விட்டது... சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் பண்ணியது” - புகழ் ஜாலி பேட்டி

Cook with comali Pugazh jolly interview

சின்னத்திரையில் காமெடி ரியாலிட்டி ஷோ வழியாக அறிமுகமாகி பின்னர் குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டியில் கோமாளியாய் களமிறங்கி போட்டியாளர்களை வெற்றி பெற வைத்து மக்களை சிரிக்க வைத்த புகழ் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக சந்தித்தோம். அவரிடம் பெரிய திரையில் நடித்து வரும் படங்கள் பற்றியும் சேர்ந்து நடித்த நடிகர்கள் பற்றியும் கேட்டோம். அவர் அளித்த பதில்..

Advertisment

கொரோனா ஊரடங்கு காலம் எல்லாருக்கும் கஷ்ட காலம். ஆனால் அதுதான் எனக்கு நல்ல காலம். லாக்டவுன் சமயத்தில் குக் வித் கோமாளியைப் பார்த்து பார்த்து எல்லோருமே பாராட்டினாங்க. சினிமா வாய்ப்பு என்பது முதலில் இயக்குநர் ஹரி தான் யானை படத்திற்காக நடிக்க கூப்டாங்க. சந்தானம், சசிகுமார் ஆகியோருடனும் படம் நடித்திருக்கிறேன்வெளி வர இருக்கிறது.

Advertisment

அஜித்தோட படம் நடிச்சிருக்கேன். ஏவிஎம் ஸ்டூடியோவில் பார்த்தபோது அவர்தான் என்னைப் பார்த்து முதலில் வணக்கம் சொல்லி ரியாக்சன்ஸ் எல்லாம் சூப்பரா பண்றம்மா என்றார். சூட்டிங் ஸ்பாட்டில் எல்லாம் தோளில் கை போட்டு பேசி இயல்பாக ஆக்கிடுவார். ரொம்ப தங்கமான மனுசன்.

விஜய் சேதுபதி எனக்கு ரொம்ப அறிவுரை சொல்வாங்க. விஜய் சேதுபதி கூட நடிக்கும்போது எதாவது ஒரு வசனம் பேசுவதை டிஸ்கஸ் பண்ணி பிறகே பேசுவோம். நெருக்கமான பந்தம் அது. சிவகார்த்திகேயன் எனக்கு எப்பவும் போன் பண்ணி பேசுவார்.நான் நடிக்கிற ஒரு சூட்டிங்க்ல உதவியாளர்கள் சர்ப்ரைஸ்ஸா வாங்கன்னு கூட்டிட்டுபோயி கேரவன்ல இருக்க சொன்னாங்க.அங்க பார்த்தா சிவ கார்த்திகேயன் உள்ளுக்குள்ள இருந்தாரு, அது மறக்க முடியாத மொமண்ட்

சூரி அண்ணா, யோகி பாபு அண்ணான்னு எல்லாருமே தங்கம் செல்லம்னு பேசுவாங்க. தம்பி நீ நல்லா வருவடான்னு வாழ்த்துவாங்க. சந்தானம் அண்ணா எப்பவுமே அன்பா இருப்பாரு, நான் வாங்குன காரில் அவர் வாங்கி கொடுத்த பரிசைத்தான் முன்னால வச்சிருக்கேன்.இப்படி எல்லா நடிகர்கள் கூடவும் ஒரு ஆரோக்கியமான உறவை மெயிண்டெயின் பண்ணி வருகிறேன்.

cook with comali Vijay tv Pugazh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe