Skip to main content

“அஜித் தோளில் கை போட்டு பேசியது... விஜய் சேதுபதி ஊட்டி விட்டது... சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் பண்ணியது” - புகழ் ஜாலி பேட்டி

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

Cook with comali Pugazh jolly interview

 

சின்னத்திரையில் காமெடி ரியாலிட்டி ஷோ வழியாக அறிமுகமாகி பின்னர் குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டியில் கோமாளியாய் களமிறங்கி போட்டியாளர்களை வெற்றி பெற வைத்து மக்களை சிரிக்க வைத்த புகழ் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக சந்தித்தோம். அவரிடம் பெரிய திரையில் நடித்து வரும் படங்கள் பற்றியும் சேர்ந்து நடித்த நடிகர்கள் பற்றியும் கேட்டோம். அவர் அளித்த பதில்..

 

கொரோனா ஊரடங்கு காலம் எல்லாருக்கும் கஷ்ட காலம். ஆனால் அதுதான் எனக்கு நல்ல காலம். லாக்டவுன் சமயத்தில் குக் வித் கோமாளியைப் பார்த்து பார்த்து எல்லோருமே பாராட்டினாங்க. சினிமா வாய்ப்பு என்பது முதலில் இயக்குநர் ஹரி தான் யானை படத்திற்காக நடிக்க கூப்டாங்க. சந்தானம், சசிகுமார் ஆகியோருடனும் படம் நடித்திருக்கிறேன் வெளி வர இருக்கிறது. 

 

அஜித்தோட படம் நடிச்சிருக்கேன். ஏவிஎம் ஸ்டூடியோவில் பார்த்தபோது அவர்தான் என்னைப் பார்த்து முதலில் வணக்கம் சொல்லி ரியாக்சன்ஸ் எல்லாம் சூப்பரா பண்றம்மா என்றார். சூட்டிங் ஸ்பாட்டில் எல்லாம் தோளில் கை போட்டு பேசி இயல்பாக ஆக்கிடுவார். ரொம்ப தங்கமான மனுசன். 

 

விஜய் சேதுபதி எனக்கு ரொம்ப அறிவுரை சொல்வாங்க. விஜய் சேதுபதி கூட நடிக்கும்போது எதாவது ஒரு வசனம் பேசுவதை டிஸ்கஸ் பண்ணி பிறகே பேசுவோம். நெருக்கமான பந்தம் அது. சிவகார்த்திகேயன் எனக்கு எப்பவும் போன் பண்ணி பேசுவார். நான் நடிக்கிற ஒரு சூட்டிங்க்ல உதவியாளர்கள் சர்ப்ரைஸ்ஸா வாங்கன்னு கூட்டிட்டு போயி கேரவன்ல இருக்க சொன்னாங்க. அங்க பார்த்தா சிவ கார்த்திகேயன் உள்ளுக்குள்ள இருந்தாரு, அது மறக்க முடியாத மொமண்ட்

 

சூரி அண்ணா, யோகி பாபு அண்ணான்னு எல்லாருமே தங்கம் செல்லம்னு பேசுவாங்க. தம்பி நீ நல்லா வருவடான்னு வாழ்த்துவாங்க. சந்தானம் அண்ணா எப்பவுமே அன்பா இருப்பாரு, நான் வாங்குன காரில் அவர் வாங்கி கொடுத்த பரிசைத்தான் முன்னால வச்சிருக்கேன்.இப்படி எல்லா நடிகர்கள் கூடவும் ஒரு ஆரோக்கியமான உறவை மெயிண்டெயின் பண்ணி வருகிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“50 பேரிலிருந்து தொடங்குறேன்” - விஜயகாந்த் நினைவிடத்தில் புகழ் அறிவிப்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
pugazh about vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தொடர்ந்து திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் புகழ், மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் ஐயா, பசின்னு வந்த அனைவருக்கும் சாப்பாடு போட்டிருக்கிறார். அதனால் இனிமேல் மதியம் நானும் சாப்பாடு போட முடிவெடுத்துள்ளேன். 50 பேரிலிருந்து தொடங்குறேன். பசி என்று யாராவது வந்தால் கே.கே நகரில் உள்ள என்னுடைய அலுவலகத்தில் வந்து சாப்பிடலாம். அதற்காக ஆசீர்வாதம் வாங்க தான் இப்போது வந்தேன். கேப்டன் சாருக்காக என்னால் முடிந்தது இதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் இதை கடைபிடிக்கவுள்ளேன்” என்றார். 

Next Story

"ரத்தத்தைப் பார்த்தால் மக்கள் கைதட்டும் சத்தத்தை ரசிக்க முடியாது" -  புகழ்

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Comedy actor Pugazh Interview 

 

சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் ஆகஸ்ட் 16, 1947  திரைப்படத்தில் நடித்த நடிகர் புகழ்  உடன் ஒரு சிறப்பு நேர்காணல்.

 

1947 படத்தில் மிகச் சிறப்பான ஒரு கேரக்டரை இயக்குநர் எனக்கு வழங்கியிருக்கிறார். பல தரப்பினரிடமிருந்தும் எனக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல குடும்ப நண்பராக அமைந்தது இறைவன் கொடுத்த வரம். மக்களின் மகிழ்ச்சி தான் என்னுடைய பிரதான நோக்கம். ரத்தத்தைப் பார்த்தால் மக்கள் கைதட்டும் சத்தத்தை ரசிக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னை ரசிக்கின்றனர். சென்னைக்கு வந்த புதிதில் மிகுந்த சிரமப்பட்டிருக்கிறேன். வெல்டிங் கடையில் வேலை செய்திருக்கிறேன். சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கிறேன். மக்கள் நம் மீது செலுத்தும் அன்புக்காக எதையும் செய்யலாம். 

 

இன்று நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு முக்கியமான காரணம் வடிவேல் பாலாஜி அண்ணன் தான். இப்போது அவர் நம்மோடு இல்லை என்றாலும், மக்கள் மனதில் எப்போதும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். எனக்குள் அவர் எப்போதும் இருக்கிறார்.

 

சூர்யா சார் மிகவும் அன்பான மனிதர். குடும்பத்தோடு நேரம் செலவிட வேண்டும் என்கிற ஆலோசனையை எனக்கு அவர் வழங்கினார். மனைவிக்காக வாழ வேண்டும் என்று கூறினார். இப்படி ஒரு மனிதரா என்று ஆச்சரியப்பட்டேன். என் நடிப்பின் மீது எதிர்மறையான விமர்சனங்களும் வந்துள்ளன. அனைத்தையும் ஏற்றுக்கொண்டு சரி செய்து கொள்கிறேன். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய நோக்கம். அதை நான் இறுதி வரை செய்வேன்.